தேடல்

டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்கிறது

புதுடில்லி: விஜய் கேல்கர் குழுவின் அறிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதால், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயரும் என கூறப்படுகிறது. நடப்பு நிதி பற்றாக்குறையை குறைப்பது குறித்து ஆராய விஜய் கேல்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு உடனடியாக எரிபொருள் விலையை உயர்த்த வேண்டும். டீசல் மீதான கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும். மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்நிலையில் டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, எரிபொருள் விலையை உயர்த்த கேல்கர் குழு பரிந்துரை செய்துள்ளது. இது இன்றும் பரிந்துரை அளவிலேயே உள்ளது. இந்த அறிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என கூறினார்.