தேடல்

"டிபன்' வாங்கி தராததால் ஆத்திரம் தந்தை, தம்பி மண்டை உடைப்பு

ஆவடி :டிபன் வாங்கி தர மறுத்ததால், தம்பி, தந்தையின் மண்டையை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர். திருமுல்லைவாயில் நாகம்மை நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர், மாரியப்பன். இவரது மகன்கள் பழனிவேல்,32, விநாயகமூர்த்தி,30. பழனிவேலுக்கு திருமணமாகி, பெற்றோருடன்வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 10.00 மணிக்கு வீட்டுக்கு வந்த பழனிவேல், தம்பி விநாயகமூர்த்தியிடம் டிபன் வாங்கி வர சொன்னார். அவர் மறுத்தார்.
இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பழனிவேல், விநாயகமூர்த்தியை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்தது. தடுக்க வந்த தந்தை மாரியப்பனுக்கும் மண்டை உடைந்தது. காயம் அடைந்த இருவரும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிந்து பழனிவேலை கைது செய்தனர்.