தேடல்

டிப்பர் லாரிக்கே "கடுக்காய்' கொடுக்கும் ஆண்டார்குப்பம் - கண்ணம்பாளையம் சாலை

சென்னை:இருபது கிராமங்களை இணைக்கும், ஆண்டார்குப்பம் - கண்ணம்பாளையம் சாலை, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு, படுமோசமான நிலையில் உள்ளது.
பொன்னேரி நெடுஞ்சாலை, ஆண்டார்குப்பம் செக்போஸ்டில் இருந்து, வடபெரும்பாக்கம் மாதவரம் நெடுஞ்சாலை, ஞாயிறு சாலை ஆகியவற்றை இணைக்கிறது. இந்த சாலையில்
தோஷிபா உயர்மின் அழுத்த மின்னாக்கி தயாரிப்பு கம்பெனி அமைக்கப்பட்டு வருகிறது.பெரும் பள்ளங்கள்பல்வேறு பகுதிகளை இணைக்கும், இந்த முக்கியமான சாலையில், ஆண்டார்குப்பம் முதல் கண்ணம்
பாளையம் வரைக்கும், சாலை படுமோசமாக காணப்படுகிறது. இருபது கிராமங்களின் போக்குவரத்திற்கு, பெரிதும் உதவும் இச்சாலை ஆங்காங்கே சேதமடைந்து, பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
செங்குன்றம் - திருவொற்றியூர், ஆண்டார்குப்பம் - சுங்கச்சாவடி, செங்குன்றம் - பிராட்வே, பிராட்வே - மணலி புதுநகர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும், மாநகர பேருந்துகள், ஆண்டார் குப்பம் - கண்ணம்பாளையம் சாலையில் செல்ல முடியாத அளவிற்கு சாலை சேதம் அடைந்துள்ளது. பள்ளங்களில் இறங்கி ஏற முடியாமல், மாநகர பேருந்துகள்
பல முறை சிக்கியுள்ளன.மேலும், தொழிற்சாலைகளில் இருந்து, சரக்கு பெட்டகங்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளால், ஆண்டார்குப்பம் சாலையில் மாநகர பேருந்துகள் வருவதற்கும், போவதற்கும் முடியாமல் சிரமப்படுகின்றன. இதனால், அந்த வழியாக இயக்கப்படும், மாநகர பேருந்துகள் போக்குவரத்து தடைப்படுகிறது.
மின்விளக்குகள் இல்லைமிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, இந்த சாலையில் மின் விளக்கு வசதியும் இல்லை.
இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. பல்வேறு நிறுவன ஊழியர்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. வழிப்பறி உள்ளிட்ட, சம்பவங்கள்
அடிக்கடி நடக்கின்றன.இதுகுறித்து, கண்ணம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில்,சில நாட்களுக்கு முன் கண்ணம்பாளையம் ஆண்டார்குப்பம் சாலையின்
நடுவில் பெரிய பள்ளத்தில் இறங்கிய, டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து மாடுகளின் மீது மோதியது. அதிர்ஷ்ட
வசமாக, ஓட்டுனர் காயமின்றி தப்பினார். இந்த சாலையை, உடனடியாக சீரமைக்க பட வேண்டும், என்றார்.