தேடல்

டில்லி செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை: தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா வரும் 27ம் தேதி டில்லி செல்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் தலைமையில் டில்லியில் வரும் 27ம் தேதி நடக்கவுள்ள தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு ஒரு நாள் முன்பாக, 26ம் தேதி நடக்கும் ஆமதாபாத்தில் நடக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அரசு பதவியேற்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.