தேடல்

தி டிஸ்கவர் 100 டி

இந்தியாவின் மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான, உலகின் மூன்றாவது இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மிகவும் சிறப்பான அம்சங்களுடன் வடிவமைத்துள்ள 100 சிசி பைக் தி அல்டிமேட் 100 என்ற டிஸ்கவர் 100 டி ஆகும். இதன் கட்டுமானம், சஸ்பென்ஷன், என்ஜின் செயல்திறன் மற்றும் மைலேஜ் என்று அனைத்திலும் சிறப்பான வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஸ்கவர் 125 st போன்று இதன் வடிவமைப்பு தோன்றினாலும் பல வகையிலும் இதன் அற்புதமான மாறுதல்கள் செய்யப்படுகிறது. இதன் டாங்க், ஹெட்லைட், சீட், சைட் பானல்கள், வீல் போன்றவைகளில் சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டு மிகவும் ஸ்டைலாக தோற்றமளிக்கிறது. மேலும் முழுமையான செயின் கார்ட், ஹைட்ராக்ஸ் சஸ்பென்ஷன், நீளமான மட்கார்ட் போன்றவை இதன் தோற்றத்தை மற்ற 100 சிசி வாகனங்களை விட பெரிதாகவும், கம்பீரமாகவும் காட்டுகிறது. என்ஜின் செயல்திறன் மிகவும் மென்மையாகவும், த்ராட்டல் செயல்பாடு துடிப்பாகவும், வண்டியின் திறன் ஓட்டுனர்களுக்கு ஏற்ப துரிதமாக செயல்படுவதாகவும் உள்ளது. இதன் 100சிசி DT-S, 4 வால்வு, 4 ஸ்ட்ரோக் ஏர் கூல்டு என்ஜின் 9000 ஆர்பிஎம்மிற்கு 10.2 ககு பவரையும், 6500 ஆர்எம்மில் 9.2 of NM டார்க்கையும் வழங்குகிறது.


இதன் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் சீரான சவாரிக்கும் எரிபொருள் சிக்கனத்திற்கும் வழிவகுக்கிறது. ஆட்டோ ஸ்டார்ட் வசதி எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் உடனடியாக ஸ்டார்ட் ஆகக்கூடிய வகையில் இயங்குகிறது. காற்று நிரப்பப்பட்ட நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன் இருப்பதால் கரடு முரடான சாலைகளிலும் சொகுசான பயணத்தை அளிக்கிறது. இதன் இரட்டை க்ரேடிஸ் சேஸிஸ் மிகுந்த பாதுகாப்பையும், இதன் முன்புற ஃபோர்க்கின் வடிவமைப்பு உறுதியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மேடு பள்ளங்கள் உள்ள சாலைகளிலும் சுகமான சவாரி அளிக்கிறது. இதன் முன் மற்றும் பின்புற ட்ரம் ப்ரேக் ஸ்திரமான செயல்பாடு கொண்டுள்ளதால் அதிக வேகத்திலும் திருப்பங்களில் நல்ல பாலன்ஸ் கிடைக்கிறது. மிகக் கூர்மையான முகப்பு விளக்கு, 10 ஸ்போக் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல் பிரீமியம் அலுமினியம் செட் செட் மற்றம் இரட்டை வண்ண க்ராஃபிக்ஸ் டிசைன் போன்றவை இதன் அழகுக்கும் கம்பீரத்திற்கும் காரணமாய் உள்ளது. இதன் மைலேஜ் மிகவும் திருப்பதிகரமாக லிட்டருக்கு 87.3 கிலோமீட்டர் அளிக்கிறது. மற்றும் இதன் விலை ரூபாய் 51,789. தமிழ்நாட்டின் எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100 சிசி பைக்கின் மிகச் சிறந்ததாக டிஸ்கவர் 100 T கருதப்படுவதாலேயே இது "தி அல்டிமேட் 100' என்று அழைக்கப்படுவது மிகவும் தகுதியானதே.