தேடல்

தண்டனையை குறைத்து வழங்க கோர்ட்டில் சவுதாலா வேண்டுதல்

புதுடில்லி:ஆசிரியர் நியமனத்தில், முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றவாளி என, அறிவிக்கப்பட்டுள்ள, அரியானா முன்னாள் முதல்வர்ஓம்பிரகாஷ் சவுதாலா, தனக்குதண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.அரியானாவில், ஓம் பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்தபோது, 3,206 ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகனும், இந்திய தேசிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, அஜய் சிங் சவுதாலா உட்பட, 55 பேர் மீது சி.பி.ஐ.,அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த, சி.பி.ஐ., கோர்ட், சவுதாலா உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள் என, அறிவித்ததுடன், அனைவரையும் உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டது. வரும், 22ம் தேதி, இவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.இந்நிலையில், தனக்கு வயதாகி விட்டதாலும், சர்க்கரை நோயாளி என்பதாலும், தண்டனையை குறைத்து அளிக்க வேண்டும் என, சவுதாலா தரப்பில், சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்றுமனு தாக்கல் செய்யப்பட்டது.