தேடல்

தொண்டர்களுக்கு முதல்வர் ஜெ., கடிதம்

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 96வது பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில்,எம்.ஜி.ஆரின் 96-ஆவது பிறந்த நாளில், அவரது பெருமைகளை நினைத்து, அவர் இந்தத் தமிழ் மண்ணுக்கு செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து, தமிழர்களின் உரிமைகளைபெற்றிட, தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க மத்திய அரசை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக உருவாகும் வகையில், வருகின்ற பார்லிமென்ட் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறிக்கும் அளவுக்கு உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்; களப் பணியாற்றிட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.