தேடல்

உண்ணாவிரதம்

வாடிப்பட்டி:வாடிப்பட்டி அருகே மூடப்பட்டுள்ள பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையின் என்.எம்.ஆர்., சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.
சங்கத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும். ஆலையை மூடிய நாளில் இருந்து மீண்டும் திறக்கும் நாள் வரை வேலை நாட்களாக கருதி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், என இதில் வலியுறுத்தப்பட்டது.