தேடல்

நக்சல்களை ஒழிப்பதில் துணிச்சலான முதல்வர்: மம்தாவிற்கு ஜெய்ராம் ‌ரமேஷ் பாராட்டு

புதுடில்லி: மேற்குவங்க மாநிலத்தில் நக்சலைட் பிரச்னைகளை துணிச்சலுடன் கையாளும்முதல்வர் மம்தா பானர்ஜிக்குமத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் புருலியா, மேற்கு மிட்னாபூர், பங்கரா ஆகிய மாவட்டங்கள் நக்சல்கள் ஆதிக்கமிக்க பகுதிகள் ஆகும். இதனை மேற்கு வங்க அரசு ஜங்கிள்மஹால் என அறிவித்துள்ளது.இப்பகுதிகளில் நக்சலைகள் தொடர்ந்து தாக்குல்களை நடத்திவருகின்றனர்.எனினும்மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இடது சாரிகள் ஆட்சி முடிவுக்கு வந்து,தற்போதுதிரிணாமுல் காங். ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. முதல்வராக மம்தா பானர்ஜி நக்சல்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அம்மாவட்டங்களில் சமூக,பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.எல்லா புகழும் மம்தாவிற்கே

@@
இந்நிலையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை , மேற்குவங்க ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுபத்‌ரோ முகர்ஜி டில்லியில் சந்தித்து பேசினார்.
பின்னர்‌ஜெய்ராம் ரமேஷ்கூறுகையில், மேற்குவங்க மாநிலத்தில் நக்சல்கள் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்கான முயற்சி எடுத்தமுதல்வர் மம்தா பானர்ஜியை பாராட்டுகிறேன்.அவர் அரசியல் ரீதியாக துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார்.தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அவர் இல்லாவிட்டாலும்,அவரது சொந்த மாநிலத்தில் நக்சல்கள் பிரச்னையை துணிச்சலுடன் கையாண்டு வருகிறார்.முன்னர் இடது சாரிஆட்சிகளின் போது மிகவும் மோசமான மாவட்டங்களாகமேற்குமிட்னாபூர், பங்குரா, புருலியா ஆகியனஜங்கிள் மஹால் என சொல்லப்பட்டன. தற்போது நிலைமை மாறி வருகிறது. இதில் மம்தாபானர்ஜியின் அணுகுமுறை சரியான நடவடிக்கை தான்.மேலும் அம்மாநிலத்தில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவினை விலக்கி கொண்ட மம்தா , ஒருமுறை காங். அரசு மூளைச்சாவினை அடைந்துவிட்டது என கருத்து தெரிவித்தார். அப்போது ஜெய்ராம் ‌‌ரமேஷ் மம்தாவினை கடுமையாக விமர்சித்து பேசினார். தற்போது மம்தாவினை அவர் புகழ்ந்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.