தேடல்

நடமாடும் மின் பழுது பார்ப்பு குழுவிற்கு வாகனம் வழங்குகிறது மின் வாரியம்

தினமலர் செய்தி எதிரொலியாக, நடமாடும் மின் பழுது பார்ப்பு குழுவிற்கு, தேவையான வாகனங்களை வழங்க, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.வாகன பிரச்னைகுறைந்த மின் அழுத்தம், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, உடனடி தீர்வு காண வசதியாக, நடமாடும் மின் பழுது பார்ப்பு திட்டத்தை மின் வாரியம் அறிமுகப்படுத்தியது.சென்னை மற்றும் புறநகரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை வடக்கு, மேற்கு,
மத்திய மற்றும் தெற்கு ஆகிய மின் வாரிய வட்டங்களில் மொத்தம், 60 நடமாடும் மின் பழுது பார்ப்பு மையங்கள் உள்ளன. இந்த மையங்களின் கீழ், நடமாடும் பழுது பார்ப்பு குழுக்கள் செயல்படுகின்றன. ஒரு குழுவில், லைன் மேன், ஒயர் மேன் மற்றும் ஒப்பந்த பணியாளர் ஆகியோர் இடம் பெறுவர். இந்த நடமாடும் மையங்களுக்கு, நான்கு சக்கர வாகனங்கள், ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டன. ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், வாகன வசதி இல்லாமல் இந்த மையங்கள் திணறின. இதனால், நடமாடும் குழு சரிவர செயல்பட முடியவில்லை. மின் வாரியம் நிர்ணயிக்கும்குறைவான கட்டணத்திற்கு, வாடகை வாகனங்கள் ஒப்பந்தம் செய்ய முன்வருவதில்லை. இதையடுத்து, குழுக்களுக்கு, இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றில், மின் பழுது நீக்க உதவும் கருவிகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. வாகனங்களும், அவ்வப்போது பழுதாகி விடுவதாகஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. நடவடிக்கை இதுகுறித்து, கடந்தாண்டு நவ., 11ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நடமாடும் மின் பழுது பார்ப்பு குழுவிற்கு தேவையான வாகனங்களை வழங்க, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, மின் வாரிய ஊழியர் ஒருவர் கூறுகையில், அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் செயல்படும், நடமாடும் மின் பழுது பார்ப்பு குழுக்களுக்கு, வாகனங்கள்வழங்கப்பட்டு உள்ளன. மாநகரில், மற்ற பகுதிகளில் செயல்படும் மின் பழுது பார்ப்பு குழுக்களுக்கும் தேவையான வாகனங்களை கொள்முதல் செய்து வழங்கும் நடவடிக்கையை மின் வாரியம் துவக்கி உள்ளது, என்றார்.

- நமது நிருபர் -