தேடல்

நடத்துனரிடம் தகராறு: ராணுவ வீரர் கைது

பீர்க்கன்காரணை:பணியில்

இருந்த போக்குவரத்து காவலரை தாக்கிய, ராணுவ வீரர் உள்ளிட்ட இருவரை,

போலீசார் கைது செய்தனர்.நேற்று முன்தினம் இரவு, பெருங்களத்தூர் பேருந்து

நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்து ஒன்றில், இரு வாலிபர்கள் ஏறினர்.

போதையில் இருந்த அவர்கள், நடத்துனரிடம் தகராறு செய்தனர். நடத்துனர்,

போக்குவரத்து பணியில் இருந்த காவலர் சங்கரிடம், புகார் தெரிவித்தார்.இதை

தட்டிக்கேட்ட சங்கரை, ஆத்திரமடைந்த வாலிபர்கள் தாக்கினர். பீர்க்கன்காரணை

போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்ததில், அச்சிறுபாக்கத்தை சேர்ந்த,

ராணுவ வீரர் கனகராஜ், 29; அசோக் நகரை சேர்ந்த அருள், 22, என்பது

தெரிந்தது.இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.