தேடல்

நம்பர்-1 இடத்தை பிடிப்பேன் *செய்னா நேவல் நம்பிக்கை

மும்பை: பாட்மின்டன் தரவரிசைப்பட்டியலில் நம்பர்-1 இடத்தை பிடிப்பேன் என, செய்னா நேவல் நம்பிக்கை தெரிவித்தார்.இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்தார். சமீபத்தில் தரவரிசைப்பட்டியலில், நம்பர்-2 இடத்தை பிடித்தார்.செய்னா கூறியது:கடந்த ஆண்டு எனக்கு சிறப்பானதாக அமைந்தது. ஒலிம்பிக் பதக்கம் உட்பட ஐந்து தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றேன். இந்த ஆண்டு ஆல் இங்கிலாந்து மற்றும் உலக சாம்பியன் தொடர் என குறைந்தது 15 முதல் 20 தொடர்களில் பங்கேற்க உள்ளேன்.பாட்மின்டன் போட்டிகளில் சீன வீரர், வீராங்கனைகள் வல்லவர்கள். அவர்களை எளிதில் வெல்ல முடியாது. இருப்பினும் கடுமையாக போராடியதால் தான் தற்போது நம்பர்-2 இடத்தை பிடிக்க முடிந்தது. தற்போது நம்பர்-1 இடத்தில் ஒரு சீன வீராங்கனை தான்