தேடல்

நயன்தாராவை போட்டியாக நினைக்கவில்லை- த்ரிஷா

த்ரிஷாவும், நயன்தாராவும் சமகாலத்து நடிகைகள். நயன்தாரா ஐயா படத்தில் அறிமுகமானார் என்றால், த்ரிஷா லேசா லேசா படத்தில் அறிமுகமானார். இருவருமே விஜய், அஜீத் என இரண்டு நடிகர்களுடன் ஒரே காலகட்டங்களில் டூயட் பாடி வந்தனர். இதனால் அந்த சமயத்தில் தனக்கு வர இருந்த சில வாய்ப்புகளை நயன்தாரா அபேஸ் பண்ணி விட்டதாக அப்போது திரைக்குப்பின்னால் த்ரிஷா கொடி பிடித்ததும் நடந்திருக்கிறது. ஆனால், இப்போது மீண்டும் நயன்தாரா பீல்டுக்குள் வந்திருப்பதால் அவர்களது தொழில் போட்டி தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுபற்றி த்ரிஷாவைக் கேட்டால், நயன்தாராவுக்கும், எனக்குமிடையே தொழில் போட்டி ஒரு சமயத்தில் நடந்தது உண்மைதான். ஆனால் இப்போது நான் யாரையுமே போட்டியாக நினைக்கவில்லை. காரணம், நானும் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளாகி விட்டது. அதனால் இனி போட்டி என்பதை தவிர்த்து இன்னும் எனக்குள் இருக்கிற திறமையை வெளிக்கொண்டு வரக்கூடிய கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்போது நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட நடிகைளெல்லாம் எனது உயிர்த்தோழிகளாகி விட்டனர். அதனால் எங்களுக்குள் போட்டி பொறாமை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் த்ரிஷா.