தேடல்

நயன்தாராவை மறந்து விட்டேன்! பிரபுதேவா

நயன்தாராவை நான் மறந்து விட்டேன், என்று நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா கூறியுள்ளார். பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறேன். இந்தி பட வேலைகள் காரணமாக தான் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டேன். ஒரு படம் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நடிகர்–நடிகைகள் தேர்வு, மேக்கப் டெஸ்ட், உடையலங்காரத்துக்கு அனுமதி என நிறைய வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் சென்னையில் இருந்து கொண்டு செய்ய முடியாது. என் சொந்த வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டது உண்மை. ஆனால், அது என் தொழிலை பாதிக்கவில்லை. கடவுள் அருளால், தொழில் நன்றாகவே நடக்கிறது.

நயன்தாரா விஷயத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. மனமுதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. நடந்தது எல்லாமே நன்மைக்காக என்று புரிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட உயர்வு, தாழ்வு, சந்தோஷம், வலி எல்லாவற்றுக்குமே நான்தான் காரணம். கடவுள் இந்த வழியை விரும்பியிருக்கிறார். நயன்தாராவுடனான உறவு முடிந்து போன விஷயம். நான் அதை மறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்போது நான் தனிமையில் இருந்தாலும், பிஸியாக இருக்கிறேன். இது, எனக்கு பிடித்து இருக்கிறது, என்றார்.