தேடல்

நிதி ஆதார பிரச்னைகளுக்குத் தீர்வு காணாவிட்டால்முதல்வரே பொறுப்பேற்க தி.மு.க., வலியுறுத்தல்

புதுச்சேரி:நிதி

ஆதாரம் குறித்த பிரச்னைகளுக்குத்தீர்வு காணாவிட்டால் ஏற்படும் நிர்வாகச்

சிக்கலுக்கு முதல்வரேமுழு பொறுப்பேற்க வேண்டும் என, தி.மு.க.,

அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கூறினார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள

அறிக்கை:நிதி நெருக்கடி குறித்து முதல்வர் நேரிடையாக குறிப்பிடாமல், மாநில

அந்தஸ்து கிடைத்தால் நிர்வாகம் மேம்படும் எனவும், மாநில நிர்வாகத்தில்

குறுக்கீடுகள் இருக்கின்றன எனவும் கூறி வருகிறார். நிர்வாகத்தை நடத்துகின்ற

முதல்வர் எந்தெந்தத் துறைகளில் குறுக்கீடுகள் இருக்கிறது, அதனால்

பாதிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து வெளிப்படையாக

தெரிவிக்க வேண்டும். பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வெவ்வேறு

திட்டமில்லா செலவினங்களுக்குப் பயன்படுத்துப்படுகிறது என்ற குற்றச்சாட்டு

எழுகிறது. இதனால், மக்கள் நலப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள்

பாதிக்கப்படுகின்றன.

நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர்

வெளியிட வேண்டும். நிதி ஆதாரம் குறித்த பிரச்னைகளுக்கு முதல்வர் தீர்வு

காணாவிட்டால், ஏற்படும் நிர்வாகச் சிக்கலுக்கு அவர் முழு பொறுப்பேற்க

வேண்டும். அரசியல் குறுக்கீடு என்ற வார்த்தையைச் சொன்னால் மக்கள் நம்ப

மாட்டார்கள்.மாநில அந்தஸ்து குறித்து,2007ம் ஆண்டு தனிக்கணக்கு

துவக்கப்பட்டபோது, முதல்வர்வலியுறுத்தினாரா? எப்பொழுதெல்லாம் தனக்குச்

சாதகமான முடிவுகள் எடுக்க முடியாமல் போகிறதோ, அப்பொழுதெல்லாம் மாநில

அந்தஸ்து என்ற கேடயத்தை பயன்படுத்துகிறார்.இது சம்மந்தமாக பிரதமர், மத்திய

உள்துறை அமைச்சர், நிதித் துறை அமைச்சர் ஆகியோரை எத்தனை முறை அணுகி

இருக்கிறார். மாநில அந்தஸ்து குறித்து முதல்வர் எடுத்த தொடர் நடவடிக்கை

என்ன...இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.