தேடல்

நிஜ ஆவி படம்

சில புதுமுக இளைஞர்கள் இணைந்து கோமாலினி என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் நடிகர் நடிகைகள் யாருமே கிடையாது. பொது இடங்களில் நடமாடும் மனிதர்களை கேண்டிட் கேமரா முறைப்படி தூரத்தில் இருந்து படம்பிடித்து அதன்பிறகு அதற்கு ஒரு திரைக்கதை எழுதி அதை சினிமாவாக்கப்போகிறார்கள். இப்போது நாங்கள் ஒவ்வொரு மனிதர்களுக்கு பின்னால் செல்லும் ஆவிகளை படம் பிடித்திருக்கிறோம், தனி அறையில் நிஜ ஆவிகளை வரவழைத்து அவைகளுடன் பேசி படம் எடுத்திருக்கிறோம். அவைகளும் நன்றாக நடித்துள்ளன என்று ஒரு குண்டைப் போடுகிறார்கள்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் அரசு கூறியதாவது: நிஜமாகவே ஆவியை படம்பிடித்துள்ளோம். நாங்கள் சில காட்சிகளை படமாக்கியபோது அதில் நாங்கள் நேரில் பார்க்காத சில உருவங்கள் பதிவாகியிருந்தன. அதை கண்டுபிடித்து சில சித்தர்கள், யோகிகள், நம்பூதிரிகளிடம் அதைக் காட்டி அதை ஆவி என்பதை உறுதிசெய்து அவர்கள் உதவியுடன் அதை வரவழைத்து படம்பிடித்துள்ளோம். இப்போது சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்று தெரியும் படம் வந்ததும் உண்மை புரியும் என்கிறார்.