தேடல்

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.220 கோடி உயர்வு

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, டிசம்பர் 28ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 4 கோடி டாலர் (220 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,657 கோடி டாலராக (16.31 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய, 21ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,653 கோடி டாலராக (16.30 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இதே வாரத்தில், அன்னிய செலாவணிகளின் சொத்து மதிப்பு, 26,201 கோடி டாலர் என்ற அளவிலும், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 443 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளன. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 2,780 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 232 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.


அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னிய செலாவணியின் மதிப்பு உயர்ந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்