தேடல்

நான்கு மாத குழந்தை வலிப்பு நோய்க்கு பலி

சென்னை:காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை, வலிப்பு நோயால் பரிதாபமாக இறந்தது.
தண்டையார்பேட்டை, கார்னேசன் நகர், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் அந்தோணி, 37; இவரது மனைவி சுகுணா, 35. இவர்களது, நான்கு மாத
குழந்தையான, யோஸ்வா, காய்ச்சலில் அவதிப்பட்டது.
குழந்தையை, ஸ்டான்லி மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, குழந்தை யோஸ்வாவுக்கு வலிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து, ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.