தேடல்

நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சி: திருவெறும்பூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 25வது நினைவுநாளையொட்டி, ஒன்றியச்செயலாளர் ராவணன் தலைமையில், பெல் வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., துரை, கும்பக்குடி கோவிந்தராஜ், யூனியன் சேர்மன் செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.