தேடல்

நேரடி வரி வசூல் ரூ.4.28 லட்சம் கோடியாக உயர்வு

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல், 8.01 சதவீதம் உயர்ந்து, 4.28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


இது, பட்ஜெட்டில், நிர்ணயித்த இலக்கை விட, 15 சதவீதம் குறைவாகும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.தனிநபர் வருமான வரி:சென்ற 2011-12ம் நிதியாண்டின், இதே காலத்தில், நேரடி வரிகள் வாயிலாக, 3.96 லட்சம் கோடி ரூபாய் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய அரசு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நேரடி வரிகள் வாயிலாக, 5.70 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.அரசின் வருவாயை காட்டிலும், செலவினம் உயர்ந்துள்ளதால், நிதிப் பற்றாக்குறை, 5.3 சதவீதமாக மறு மதிப்பீடு செய்யப்பட்டது.நடப்பு நிதியாண்டின், டிசம்பருடன் நிறைவடைந்த, ஒன்பது மாத காலத்தில், கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, குறைந்த அளவு தொகையே திரும்ப வழங்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, நிகர நேரடி வரி வசூல், 3.68 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துஉள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் வசூலான தொகையை (3.24 லட்சம் கோடி ரூபாய்) விட, 13.7 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள் செலுத்திய வரி 4.94 சதவீதம் உயர்ந்து, 2.69 லட்சம் கோடியிலிருந்து, 2.83 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


செல்வ வரி:தனிநபர் வருமான வரி வசூல், 14.57 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1.26 லட்சம் கோடியிலிருந்து, 1.44 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செல்வ வரி வசூல், 1.55 சதவீதம் உயர்ந்து, 646 கோடியிலிருந்து, 656 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், பங்கு பரிவர்த்தனை வரி, 12.46 சதவீதம் சரிவடைந்து, 3,763 கோடியிலிருந்து, 3, 294 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்