தேடல்

நெருக்கடி ரேஷன் கடைகளுக்கு புதிய இடம் கடைகளை பிரிக்க உணவு பொருள் வழங்கல் துறை முடிவு

சென்னை : சென்னையில்,

நெருக்கடியான இடத்திலும், போதிய இட வசதியின்றியும் இயங்கி வரும் நியாய

விலை கடைகளுக்கு, குறைந்த வாடகையில் இடம் ஒதுக்கித் தர, மாநகராட்சி முடிவு

செய்துள்ளது.
இதை அடுத்து, மாநகராட்சி கூடுதல் இடங்களை ஒதுக்கினால்,

அதிக எண்ணிக்கையில் ரேஷன் கார்டுகள் உள்ள கடைகள், இரண்டாக பிரிக்கப்படும்,

என, உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை

மாநகரில், 1,696 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இவற்றில், பாதிக்கும் மேலான

கடைகள், போதிய இடவசதியின்றி, சிறு கட்டடங்களிலும், நெருக்கடியான

இடங்களிலும் செயல்படுவதால், உணவு பொருள் வாங்க, கடைகளுக்கு செல்லும்

மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது.
பட்டியல் தயாரிப்பு
இதை

கருத்தில் கொண்டு, மாநகராட்சி பகுதியில், போதிய இட வசதியின்றி செயல்படும்

அனைத்து நியாய விலை கடைகளுக்கும், குறைந்த வாடகையில் மாநகராட்சிக்கு

சொந்தமான இடங்கள் ஒதுக்கப்படும் என, மேயர் சைதை துரைசாமி தெரிவித்து

உள்ளார்.
இதை செயல்படுத்த, 200 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் ஆய்வு

செய்து, நெருக்கடியான கட்டடங்களில் இயங்கும் நியாய விலை கடைகள் பட்டியலை

தயாரிக்க உள்ளனர். அனைத்து கடைகளுக்கும், மாற்று இடம் ஒதுக்கித் தரப்படும்

என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. சில பகுதிகளில், மாநகராட்சிக்கு இடம்

இல்லை என்றாலும், பிற துறைகளுக்கான இடங்களை பெற்றுத்தரவும் முடிவு செய்யப்

பட்டு உள்ளது.
கடைகள் பிரியும்
மாநகரின் முக்கிய பகுதிகளில்

செயல்படும் பல ரேஷன் கடைகளில், 3,000க்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ளன.

இங்குதான் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து,

உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுகுறித்து,

நாங்கள் மாநகராட்சிக்கு கடிதம் எழுதி இருந்தோம். சரியான இடம் கிடைக்காததால்

தான், பல இடங்களில், சிறு கட்டடங்களில் கடைகள் செயல்படுகின்றன.

தேவைக்கேற்ப இடங்களை மாநகராட்சி ஒதுக்கும் பட்சத்தில், அதிக ரேஷன் கார்டு

உள்ள கடைகள் இரண்டாக பிரிக்கப்படும். அதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன,

என்றார்.