தேடல்

நெல்லை அருகே போலீஸ் மீது தாக்கு

திருநெல்வேலி:நெல்லை அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த பெயரை, பெயிண்டால் அழித்துபோலீசாரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் பழவூர் அருகே உள்ளது சிதம்பராபுரம்
யாக்கோபுபுரம். இந்த கிராமத்தில் ஒரே சமூகத்தை(நாடார்) சேர்ந்த இந்து, கிறிஸ்துவ பிரிவினர் வசிக்கின்றனர். இந்துக்கள் வசிக்கும் பகுதி சிதம்பராபுரம் எனவும் கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதி யாக்கோபுபுரம் எனவும் அழைக்கப்படுகிறது. ஊராட்சி அலுவலக கட்டடத்தில் எழுதப்பட்டிருந்த சிதம்பராபுரம்-யாக்கோபுபுரம்-சிதம்பராபுரம் பெயரை அழிக்கவேண்டும் என கிறிஸ்தவர்கள் கோரிக்கை வைத்ததால் பிரச்னை இருந்து வந்தது.இதனால் அங்கு பாதுகாப்பிற்காக நேற்று இரண்டு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். நேற்று மாலையில் கிறிஸ்துவ ஆலயத்தில் பிரார்த்தனை முடிந்ததும் அங்கு கூடிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்அந்த பெயரை கறுப்பு பெயிண்ட் கொண்டு அழிக்க முற்பட்டனர். அங்கு பணியில் இருந்த போலீசார் ராஜூ, ராஜசேகரன்ஆகியோர் அதனை தடுத்தனர். ஆனால் அந்த கும்பல் போலீசாரின் சட்டையை பிடித்து கிழித்துதாக்கியது. பின்னர் கறுப்பு பெயிண்டால் ஊராட்சி பெயரை அழித்தனர். தாக்கப்பட்ட போலீசார், தந்த தகவலின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி அங்கு வந்தார். அங்கு கூடி நின்ற கும்பல், பெண் எஸ்.ஐ.,மீதுகற்களை வீசி தாக்கியது. இதில் அவர் கீழே விழுந்து காயமுற்றார். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.மாவட்ட எஸ்.பி.,விஜயேந்திர பிதரி தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.வன்முறையில் ஈடுபட்ட செல்வராஜ் 50, பால்துரை 49, டேனியல் 44 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.