தேடல்

நாளை தி.மு.க., செயற்குழுமத்திய அமைச்சர் அழைப்பு

நாமக்கல்:

மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாளை (ஃபிப்., 4), நாமக்கல்லில்

நடக்கிறது என, மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் தெரிவித்துள்ளார்.அவர்

வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம்,

நாளை (ஃபிப்., 4), மாவட்ட அலுவலகத்தில், காலை, 10 மணிக்கு நடக்கிறது.

மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், கழக

பொருளாளர் ஸ்டாலின், ஃபிப்ரவரி, 16ம் தேதி நாமக்கல்லில் நடக்கும் லோக்சபா

தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வருவது குறித்து

விவாதிக்கப்படுகிறது.மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு

உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அளவிலான

இளைஞரணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்,

தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தவறாமல் பங்கேற்க

வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.