தேடல்

நித்தி பிறந்த நாள் விழா ஊர்வலத்துக்கு போலீஸ் தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நித்தியானந்தாவின் பிறந்த நாள் விழாவையொட்டி, ஊர்வலம் நடத்த போலீஸார் திடீர் தடை விதித்தனர். அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு தரிசனத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. நித்தியானந்தா, ஆண்டுதோறும் தன் பிறந்த நாள் விழாவை திருவண்ணாமலையில் கொண்டாடடுவார். கடந்த ஆண்டு, அவர் பல்வேறு சோதனைகளை சந்திக்க நேரிட்டதால், இந்த ஆண்டு, அவரது சீடர்களை உத்வேகப்படுத்தும் வகையில், பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டிருந்தார். அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க, பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சீடர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு, ஆஸ்ரம நிர்வாகத்தின் சார்பில், சாப்பாடு உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.