தேடல்

நீத்துவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடித்து, அடுத்து வெளியாகவுள்ள, ஆதிபகவன் படத்தை பற்றி, அவரிடம் கேட்டபோது, உற்சாகத்துடன் பேசினார். முன்னதாக, தன் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட ஜெயம் ரவி, இந்த படம், என் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்த படத்துக்காக, நானும், ஹீரோயின் நீத்து சந்திராவும், இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த படம் முடியும் வரை, வேறு எந்த படங்களிலும், நாங்கள் நடிக்கவில்லை என்றார். மேலும், நீத்துவுக்கு, தமிழில் சரியாக பேசத் தெரியாததால், படப்பிடிப்பில், அவருக்கு உதவினேன். அதேபோல், ஒரு சில காட்சிகளில் நடிக்கும்போது, தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டால், நீத்து எனக்கு, உதவி செய்வார். எங்களின் உழைப்புக்கு, படம் வெளியானதும், பலன் கிடைக்கும் என, நம்புகிறோம் என்றார்.