தேடல்

தென்மண்டல நீச்சல் போட்டி தமிழகத்துக்கு 18 தங்க பதக்கம்

சென்னை :சென்னையில் நடைபெறும், தென்மண்டல நீச்சல் போட்டியில், ரூபன் குமார், ஜெயவீனா உட்பட, 18 பேர், தங்கப் பதக்கம் வென்றனர். சென்னை

வேளச்சேரி நீச்சல் குளத்தில், தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில்

நடக்கும், 26வது தென்மண்டல நீச்சல் போட்டியில், இரண்டாவது நாளன்று, 400

மீ., தனி நபர் பிரிவில், ரூபன் குமாரும், 50 மீ., பேக் ட்ரோக் பிரிவில்,

முகுந்தனும் தங்க பதக்கங்கள் வென்றனர். பெண்கள் பிரிவில், 800 மீ., பிரி

ஸ்டைல் பிரிவில், ஸ்ருதியும், 200 மீ., மேட்லி பிரிவில், ஜெயவீனாவும் தங்க

பதக்கம் வென்றனர். தமிழகத்துக்கு, இரண்டாவது நாளில் மட்டும், 18 தங்கப்

பதக்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.