தேடல்

தனது குற்றங்களை மறைக்க மத்திய அரசு மீது வீண் பழி

புதுச்சேரி:புதுச்சேரி

அரசு தனது குற்றங்களை மறைப்பதற்காக, மத்திய அரசு மீது வீண் பழி

சுமத்துகிறது என, சட்டசபை எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் கூறினார்.
இதுகுறித்து

நிருபர்களிடம், அவர் நேற்று கூறியதாவது:புதுச்சேரி அரசு தன்னுடைய

குற்றங்களை மறைப்பதற்காக, மத்திய அரசு மீது வீண் பழி சுமத்த

துவங்கியுள்ளது. புதுச்சேரி அரசு கேட்ட நிதி உள்ளிட்ட அனைத்தையும் மத்திய

அரசு வழங்கியுள்ளது. தலைமை செயலரை தந்துள்ளது. ஆனால், மாநில அரசு,மத்திய

அரசு பணம் தரவில்லை, நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடக்குகிறது என்று

குற்றம் சுமத்துகிறது. முதல்வர் ரங்கசாமி, நிதி இல்லை என தொடர்ந்து பொய்யான

குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.

ராஜிவ் மருத்துவமனை கட்ட 50 கோடி

செலவில் திட்டம் தீட்டப்பட்டது. 35 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டது. ஆனால்

ஒப்பந்தக்காரர் பணம் போதவில்லையென,நீதிமன்றத்திற்கு வெளியே

மத்தியதஸ்ரிடம் முறையீடு செய்தார். இதனை எதிர்த்து அரசு மேல் முறையீடு

செய்யாமல், எந்தக் கேள்வியும் எழுப்பாமல், ஒப்பந்தக்காருக்கு சாதகமாக 25

கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதே போல் மருத்துவ கல்லூரி விவகாரத்திலும்

ஒப்பந்ததாரரின்மேல்முறையீட்டுக்காக 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.

இதற்கு கவர்னர், தலைமை செயலர் எப்படிஅனுமதி அளித்தனர்... முதியோர்

உதவித்தொகை, பாதாள சாக்கடை, குப்பை வாருதல் உள்ளிட்ட அத்தியாவசிய சிறிய

பணிகளுக்கு நிதி இல்லை... ஆனால் 25 கோடி, 10 கோடி என எந்த கேள்வியும்

கேட்காமல் எப்படி வழங்கப்பட்டுள்ளது... இதைத் தட்டி கேட்ட நிதி துறை செயலர்

இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தவறைத் தட்டி கேட்பது தவறா...அவர் ஏன்

இடம் மாற்றம் செய்யப்பட்டார் என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க

வேண்டும்.பெட்ரோல்பங்க் பாக்கி, மின் கட்டணம் உள்ளிட்ட வரி வருவாய்களை

வசூலிக்க அரசு தீவிரம் காட்டவில்லை. தனக்கு வேண்டியவர்களுக்குச் சலுகை

காட்ட அரசு முனைப்பாக உள்ளது.இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்.