தேடல்

"தனியார் பராமரிக்கும் மாநகராட்சி பூங்காவில் மக்களை அனுமதிக்காவிட்டால் நடவடிக்கை'

சென்னை

: தனியார் பராமரிப்பில் உள்ள, திறந்தவெளி நில பூங்காக்களில், மக்களுக்கு

தடையின்றி அனுமதிக்க வேண்டும்; அவ்வாறு அனுமதிக்காவிட்டால் தனியார் மீது

நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மாநகராட்சி

கூட்டத்தில், திறந்தவெளி நில பூங்காக்களை தனியார் நிறுவனங்கள் பராமரிக்க

அனுமதிக்கும் இடங்களில், பொதுமக்கள் தடையின்றி செல்ல

அனுமதிக்கப்படுகிறார்களா, அதற்கான நிபந்தனைகள் என்ன, என, துணைமேயர்

பெஞ்சமின் கேள்வி எழுப்பினார்.இதற்கு மேயர் சைதை துரைசாமி பதில் அளித்து

பேசியதாவது: தனியார் நிறுவனங்கள் கொடுத்த நிலங்களில் அமையும் பூங்காக்களை

அவர்களே பராமரிக்க விரும்பினால், மாநகராட்சி விதிகளின்படி

அனுமதிக்கப்படுகிறது.இந்த பூங்காக்களில், பொதுமக்கள் தடையின்றி

உபயோகப்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு மக்களை அனுமதிக்காவிட்டால்

உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் நிறுவனம் மூலம் ஆக்கம், பராமரிப்பு

என்ற வகையில் அனுமதிக்கும் பூங்காக்களுக்கு, 56 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு

உள்ளன. இவ்வாறு, மேயர் கூறினார். அப்போது, கவுன்சிலர் சின்னையா, என்

வார்டில் உள்ள பூங்காவை, தனியார் கல்லூரி ஒன்று,ஆக்கிரமித்து வருகிறது,

என்றார். இதற்கு பதில் அளித்த மேயர், மாநகராட்சி பூங்காவை யார்

ஆக்கிரமித்தாலும், கவுன்சிலர்கள் அவற்றை என் கவனத்திற்கு கொண்டு வந்தால்,

உடனடியாகநடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.