தேடல்

பட்டப் பகலில் வீடு புகுந்து திருட்டு

விழுப்புரம்:விழுப்புரம்

அருகே பட்டப்பகலில் வீட்டில் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம

நபர்கள் திருடிச் சென்றனர்.விழுப்புரம் அருகே உள்ள வி.அகரம் கிராமத்தைச்

சேர்ந்தவர் கங்காதரன், 55; விவசாயி. இவர், நேற்று காலை தனது வீட்டைப்

பூட்டிவிட்டு, விழுப்புரத்தில் நடந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு

வந்திருந்தார்.மாலை 5 மணிக்கு அவர் வீட்டிற்கு சென்றபோது, கதவுகள்

திறக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள்

மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணமும் திருடு போனது தெரிய வந்தது.இது குறித்த

புகாரின் பேரில், வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார்

சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.பட்டப் பகலில் நடந்த திருட்டு

சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.