தேடல்

பரபரப்பு குறைந்து விட்டதே- ஹன்சிகா அதிர்ச்சி!

தமிழ் சினிமாவுக்கு ஹன்சிகா என்ட்ரி ஆனபோது, அவர் பெயரளவில் பெரிய அளவில் பரபரப்பும், எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் முதலில் நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் படங்களின் தோல்வி அவரை மங்க வைத்து விட்டது. ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி மீண்டும் ஹன்சிகாவை பரபரப்பான நடிகையாக்கியது. அதே வேகத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களம் புக்காகின. சேட்டை, சிங்கம்-2, வாலு என பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

ஆனால் எந்த படமும் திரைக்கு வராததால் ஹன்சிகா பீல்டில் இருக்கிறாரா? இல்லையா? என்று நினைக்கிற அளவுக்கு ஆப்பாகி விட்டார். அதோடு, ஹன்சிகா பேசி வைத்திருந்த ஓரிரு படங்களும் இப்போது நயன்தாரா பக்கம் திரும்பி நிற்கின்றன. அதனால் கைவசம் இருக்கும் படங்கள் வெற்றி பெற்றால்தான் அடுத்தடுத்து படங்கள் கிடைக்கும் என்கிற இக்கட்டான நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளார் ஹன்சிகா.

இந்த நேரத்தில், மார்க்கெட்டில் பரபரப்பாக பேசப்படுவதற்கு ஏதாவது பரபரப்பு செய்திகளை வெளியிட வேண்டும் அல்லது சினிமா விழாக்களுக்கு விசிட் அடித்து ஏதாவது பரபரப்பாக பேச வேண்டும். அப்போதுதான் நாம் பிசியாக இருப்பது மற்றவர்களுக்கு தெரியும். இல்லையேல் மார்க்கெட் முடிந்து விட்டதாக ஓரங்கட்டத் தொடங்கி விடுவார்கள் என்று ஹன்சிகாவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்களாம் அபிமானிகள். அதனால் ஏதாவது பரபரப்பு தீயை கொளுத்திப்போட வேண்டும் என்பதற்காக தனது கோலிவுட் சகாக்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் ஹன்சிகா.