தேடல்

"பறந்து' வேலை பார்க்க கார்: கிருஷ்ணசாமி ஆசை

சென்னை:எம்.எல்.ஏ.,க்கள், தொகுதிகளில், விரைந்தும், பறந்தும் வேலை பார்க்க வேண்டி இருப்பதால், அவர்களுக்கு, தமிழக அரசு, கார்கள் வழங்க வேண்டும், என, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது:
எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், அலுவலகம் தேவை. எம்.எல்.ஏ.,க் கள், விரைந்தும், பறந்தும் வேலை பார்க்க வேண்டி உள்ளது. எனவே, எம்.எல்.ஏ.,க்களுக்கு, கார்கள் வழங்க வேண்டும். தொகுதி நிதியை, 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.
முனுசாமி - உள்ளாட்சித் துறை அமைச்சர்: கலெக்டர் அலுவலகங்களில், தனி அலுவலகம் தேவையில்லை. ஏற்கனவே, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அலுவலகங்கள் இருக்கின்றன. தொகுதி நிதியாக, தற்போது, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, 2 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
மார்ச், 2ம் தேதி, இலங்கையின் மீது மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தை, ஐ.நா., கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை, இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். அதற்கு, ஒரு தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.