தேடல்

பள்ளி கிரிக்கெட் போட்டி டான் பாஸ்கோ சாம்பியன்

சென்னை : சென்னையில் நடைபெற்ற பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், டான் பாஸ்கோ பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
சென்னையில்,

பள்ளி அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில், எழும்பூர், டான் பாஸ்கோ

பள்ளி ஏ அணி முதலில் பேட்டிங் செய்து, 30 ஓவரில், ஏழு விக்கெட்டுகளை

இழந்து, 166 ஓட்டங்கள் எடுத்தன.
பின்னர் விளையாடிய, செயின்ட் பீட்ஸ்

பள்ளி அணி, 29.1 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 137 ஓட்டங்கள்

எடுத்து தோல்வியை தழுவியது. டான்பாஸ்கோ அணியை சேர்ந்த வீரர்கள், ஷியாம், 82

ஓட்டங்களும், யக்சரத், 15 ஓட்டங்கள் விட்டு கொடுத்து, நான்கு

விக்கெட்டுகளை கைப்பற்றி, வெற்றிக்கு வழிவகுத்தனர்.