தேடல்

பள்ளி செல்லா குழந்தைகள் மறுகணக்கெடுப்பு பணி

பேரூர்:அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், முத்திபாளையத்தில் பள்ளிச் செல்லா குழந்தைகள் மறுகணக்கெடுப்பு பணி நடக்கிறது.கோவை மாவட்ட முதன்மை, கூடுதல் முதன்மை, மாவட்ட தொடக்கல்வி அலுவலர்களின் உத்தரவுப்படி, பள்ளிச்செல்லா குழந்தைகளின் மறுகணக்கெடுப்பு நடந்து வருகிறது. தொண்டாமுத்தூர் அருகே, முத்திபாளையத்தில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் திப்பன், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் பள்ளிச்செல்லா குழந்தைகளின் மறுகணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். பாக்குத் தொழிலில் ஈடுபட்டுள்ள அசாம் மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் 20 பேர், பள்ளிச் செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 20 குழந்தைகள் பெயர் பட்டியல் எடுக்கப்பட்டு, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஏ.இ.ஓ., தமிழ்ச்செல்வி, ஆசிரியர் பயிற்றுநர்கள் தண்டாயுதபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.