தேடல்

பள்ளி மாணவிகற்பழித்து கொலை

வேலூர்: வேலூரில், பள்ளி மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, ஆண்டியப்பனூரை சேர்ந்தவர் செல்வி, 9 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அங்குள் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்ற மாணவி, மாலை வீடு திரும்பவில்லை.பெற்றோர், பல இடங்களில் தேடிய நிலையில், இரவு, 10 மணிக்கு அங்குள்ள வாழைத்தோட்டத்தில், கழுத்து, கன்னத்தில் காயங்களுடன் நிர்வாணமாக கிடந்த மாணவி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.குரிசிலாப்பட்டு போலீஸார், மாணவியின் பிரேதத்தை கைப்பற்றி, திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். சோதனையில், பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிந்தது.பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, காரில் வந்த சிலர், மாணவியை கடத்தி கற்பழித்திருக்கலாம், என்ற சந்தேகத்தில் போலீஸார், நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.