தேடல்

பள்ளத்தில் விழுந்து இறந்த குழந்தைமூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு

சென்னை:காசிமேட்டில்,

பள்ளத்தில் விழுந்து பலியான குழந்தையின் பெற்றோருக்கு, மூன்று லட்சம்

ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.காசிமேடு இந்திரா நகரை

சேர்ந்த, தேசப்பன், 35, என்பவரின் ஒன்றரை வயது குழந்தை சந்தோஷ் குமார்.

நேற்று முன்தினம், மீன்பிடி துறைமுகம் அருகே, நடந்து வரும் சாலைப்பணிக்காக,

ஒப்பந்ததாரர்கள் தோண்டிய இரண்டடி பள்ளத்தில் விழுந்து, குழந்தை

பலியானது.நேற்று, ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட

பின்,குழந்தையின் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அவர்கள்,

குழந்தையை பெற மறுத்து, இழப்பீடு கேட்டு, ஸ்டான்லி மருத்துவமனை அருகே,

சாலை
மறியலில் ஈடுபட்டனர்.இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தை, துறைமுக

அதிகாரிகள் நேற்று மாலை பார்வையிட்டனர். பின், பணியை மேற்கொண்டிருந்த

ஒப்பந்ததாரர்கள், இறந்த குழந்தையின் பெற்றோருக்கு, மூன்று லட்சம் ரூபாய்

இழப்பீடு தந்து, பிரச்னையை சுமுகமாக முடித்து கொண்டதாக

கூறப்படுகிறது.இதையடுத்து, குழந்தையின் உடலை, பெற்றோர் மருத்துவமனையில்

இருந்து பெற்று சென்றனர்.