தேடல்

பவானி சங்கமேஸ்வரர் கோவில் பாலாலயத்துடன் திருப்பணி துவக்கம்

பவானி:

ஈரோடு மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற பவானி சங்கமேஸ்வரர் கோவிலில்

பாலஸ்தாபன விழா, திருப்பணி துவக்க விழா நடந்தது.கடந்த, 30ம் தேதி

ஸ்ரீசங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வேதநாயகி மண்டபத்தில் ஸ்ரீமஹா

கணபதி பூஜையுடன் பாலஸ்தாபன விழா துவங்கியது.கணபதி ஹோமம், மஹா தீபாராதனை

மற்றும் வாஸ்து சாந்தி நடந்தது. 31ம் தேதி நவகிரஹ ஹோமம், தேவதா

பிரார்தனைகள் நடந்தது. நேற்று காலை பாலஸ்தபான விழா மற்றும் திருப்பணி

துவக்க விழா நடந்தது.விநாயகர், முருகன், சிவன்-பார்வதி, ஆதிகேசவ பெருமாள்

உட்பட பரிவார மூர்த்திகளாக, 68 விமான கலங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு,

புனித நீர் ஊற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியை பவானி சங்கமேஸ்வரர் கோவில்

சிவாச்சாரியார்களான ஞானமணி, சுப்ரமணியன், சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட

குழுவினர் மற்றும் திருவெள்ளரை வாசுதேவபட்டர், வெங்கடேச ஐயங்கார் ஆகியோர்

செய்தனர்.பவானி நகராட்சி தலைவர் கருப்பணன், துணைத் தலைவர் ராஜேந்திரன்,

அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணராஜ், பவானி தொகுதி இணை செயலாளர்

சிவபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் முத்துசாமி, மாவட்ட

மாணவரணி துணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர்

ஸ்ரீனிவாசன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி தலைவர் வெங்கடாஜலம்,

பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, கோவில் ஆய்வாளர்

பாலசுந்தரி, செல்லியாண்டி அம்மன் கோவில் செயல் அலுவலர் மருதாசலம் உட்பட

பலர் பங்கேற்றனர்.