தேடல்

பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி

விருதுநகர்:சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு அரசு விரைவு பஸ்சென்றது. விருதுநகர் ஆர்.ஆர்.நகர் அருகே நான்கு வழிச்சாலையில் அதிகாலை 4.45 மணிக்கு சென்ற போது, ரோட்டோர பாலத்தில் மோதி கவிழ்ந்தது. டிரைவர் சத்தியநாதன்.40, பலியானார். கண்டக்டர் பால்ராஜ்,44, பயணிகள் பார்த்தசாரதி,27, சுப்பிரமணி, 46, பிரபு,23, கந்தவேல், 46,சக்திவேல்,27, மெர்ஸி,68, காயமடைந்தனர். வச்சகாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.