தேடல்

துப்பாக்கி சண்டடையில் 13 பேர் சுட்டுக்கொலை

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் போலீசாருக்கும், போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் தென்கிழக்கே அட்டிமோனான் பகுதியில் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக அறிந்த போலீசார் அங்கு சுற்றி வளைத்தனர். அப்போதுநடந்த துப்பாக்கிச்சண்டையில்13 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்துபயங்கர ஆயுதங்கள், துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.