தேடல்

தப்பித்தார் சாமுவேல்ஸ்

மெல்போர்ன்: பிக்-பாஷ் தொடரில் ஷேன் வார்னுடன் மோதிய மர்லான் சாமுவேல்ஸ், அபராதம் மற்றும் தண்டனையில் இருந்து தப்பினார்.ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் டுவென்டி-20 தொடர் பிக்-பாஷ் தொடர் லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் போது, ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன், ரெனிகேட்சின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் இடையே மோதல் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.இதில் சாமுவேல்சைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியது, அவர் மீது பந்தை எறிந்தது போன்ற செயலுக்கு, வார்னுக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம், ஒரு போட்டியில் பங்கேற்க வார்னுக்கு தடை விதிக்கப்பட்டது.இப்போட்டியில் மலிங்கா பந்தில் காயம் அடைந்த சாமுவேல்ஸ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். வார்ன் மீது பேட்டினை எறிந்த செயலுக்கு இவருக்கு அபராதம், தண்டனை விதிக்கப்படலாம் என்ற நிலையில், இதில் இருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து விசாரித்த விசாரணை கமிஷனர் ஜான் பிரைஸ் கூறுகையில்