தேடல்

பாக்.,கில் தற்கொலைப்படை தாக்குதல்: 20 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானில் கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.ஈரான் சென்று விட்டு குவெட்டாவிற்கு திரும்பும் வழியில் பாலுசிஸ்தான் அருகில் உள்ள திரின்கார்க் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. பஸ்சில் 45 பேர் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். இந்த குண்டுவெடிப்பு காரணமாக அருகிலிருந்த பேருந்திலும் தீப்பிடித்தது.