தேடல்

பாக். செயல் மன்னிக்க முடியாதது: கெஜ்ரிவால்

போபால்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் செய்த கொடூர செயலை ஒரு போதும் மன்னிக்க முடியாது.அதற்காக இரு நாடுகளும் போர் முனைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அரவிந்த் ஜெரிவால் கூறினார். ஆம் ஆத்மி கட்சியின் மத்திய பிரதேச நிர்வாகிகள் கூட்டம் போபால் நகரில் நடந்து. இதில் கலந்து கொண்டு சமூகஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:பாகிஸ்தான் ராணுவம் இரு இந்திய வீரர்களை கொன்று தலையை துண்டித்ததை ஒரு போதும் மன்னிக்க முடியாது. இது ஒரு இரக்கமற்ற செயல். நிலைமை இரு நாடுகளுக்கும் பதட்டத்தினை ஏற்படுத்தினாலும், அதற்காக போர்முனையை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.