தேடல்

புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை கற்கள் சேதம்:விமான நிலையத்தில் பயணிகள் தவிப்பு

திரிசூலம் : சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில், புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை கற்கள் பெயர்ந்துள்ளதால், டிராலிகளை தள்ள முடியாமல் பயணிகள் சிரமப்படு
கின்றனர்.சென்னை விமான நிலையத்தில், புதிய பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனைய விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின், ஒரு பகுதியாக, விமான நிலைய நுழைவாயில் வெளிப்புறம் முழுவதும் கான்கிரீட் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.சேதமடைந்தது ஏன்?இந்த கற்கள், சில மாதங்களுக்கு முன் பதிக்கப்பட்டன. இன்னும் புதிய முனையங்கள் திறப்பு விழா காண்பதற்கு முன்பே, இந்த கற்கள் பெயர்ந்து, சேதமடைய துவங்கி
விட்டன. சர்வதேச முனையத்தில் இந்த கான்கிரீட் கற்கள் பெயர்ந்து, மணல்
குவியலாக காட்சி அளிப்பதால், டிராலியில் பொருட்களை வைத்து தள்ளி செல்வதில்பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. கான்கிரீட் கற்கள் பதிக்கப்படுவதற்கு முன், தரை பலப்படுத்தப்பட்டு, மணல், சிமென்ட் கலவை கொட்டப்பட வேண்டும்.
ஆனால், வெறுமனே மணல் மட்டும் கொட்டப்பட்டு, அதற்கு மேல் கான்கிரீட் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.அதிலும், கற்களுக்கு இடையே இடைவெளி அதிகமாக விடப்பட்டு உள்ளது. இதனால் டிராலி சக்கரம், டிராவல் பைகள் சக்கரத்தில் சிக்கி, இந்த கற்கள் பெயர்ந்து உள்ளன.பணிகள் முடியவில்லைவிமான பயணிகள் கூறுகையில்,டிராலியை தள்ளி செல்லும் போது, பெயர்ந்து உள்ள கற்களுக்கு இடையே சக்கரம் சிக்குவதால், சிரமமாக உள்ளது.
பிரமாண்டமான விமான நிலையத்தில், இதுபோன்ற பணிகளை நிர்வாகம் கவனிக்க வேண்டும் என்றனர்.இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது,இன்னும் கட்டுமான பணிகள் முழு அளவில் முடியவில்லை. இதுபோன்ற சிறுசிறு பணிகளை, ஒப்பந்ததாரர்கள் மூலம் இறுதியில் முழுமையாக முடிப்போம் என்றனர்.