தேடல்

புஜாராவுக்கு நிச்சயதார்த்தம்

ராஜ்கோட்:இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவுக்கும், ராஜ்கோட்டினை சேர்ந்த பூஜாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.டிராவிட், லட்சுமண் ஓய்வுக்குப் பின் இந்திய டெஸ்ட் அணியில், நிரந்தர இடத்தை பிடிக்க முயற்சித்துக் கொண்டுள்ளார் குஜராத்தை சேர்ந்த சத்தீஸ்வர் புஜாரா, 24. இதுவரை 5 டெஸ்டில் பங்கேற்று ஒரு சதம், அரைசதம் உட்பட 323 ரன்கள் எடுத்துள்ளார்.இவருக்கும், குஜராத்தின் ஜாம்ஜோத்பூரைச் சேர்ந்த பூஜா பாபரி, 22, என்பவருக்கும் நேற்று எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர், சில்லறை வர்த்தக துறையில் மேலாண்மை படிப்பு (எம்.பி.ஏ.,) படித்துள்ளார்.நிகழ்ச்சியில் சவுராஷ்டிரா அணி கேப்டன் ஜெயதேவ் ஷா மட்டும் கலந்து கொண்டார். மற்ற கிரிக்கெட் வீரர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை.