தேடல்

பூட்டை உடைத்து பணம் திருட்டு

அரூர்:

கம்பைநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து, ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்

மற்றும் பால் மானிடரை திருடி சென்றவர்களை போலீஸார் தேடி

வருகின்றனர்.கம்பைநல்லூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பெருமாள், 35. அதே

பகுதியில் உள்ள சோபா என்பவரது வீட்டில் ஒரு பகுதியில் பாலை கொள்முதல்

செய்து அதனை தனியார் நிறுவனத்துக்கு அனுப்பி வந்தார்.நேற்று முன்தினம் பால்

ஏஜன்ட் கொடுத்த ரொக்க பணம் ஒரு லட்ச ரூபாயும் மாடு வாங்க வைத்திருந்த

வைத்திருந்த, 70 ஆயிரம் ரூபாயை அறையில் உள்ள ஒரு டிராயரில் வைத்திருந்தார்.

நேற்று காலை சென்ற போது அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு டிராயரில்

இருந்த, ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 ஆயிரம் ரூபாய்

மதிப்புள்ள பால் அளவு மானிட்டரும் திருடு போனது. பெருமாள் கம்பைநல்லூர்

போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ., வேடியப்பன்

விசாரிக்கிறார்.