தேடல்

பூட்டிய வீட்டில் 25 சவரன் திருட்டு

பெருங்களத்தூர் :பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, 25 சவரன் நகை, மடிக்கணினி மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
புது பெருங்களத்தூர், பாரதி அவென்யூவை சேர்ந்தவர் சீனிவாசன், 60. இவர், கடந்த சில நாட்களுக்கு முன், குடும்பத்தாருடன் பெங்களூரு சென்றார். இந்நிலையில், நேற்று காலை, பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தபோது, சீனிவாசன் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை நடத்தியதில், வீட்டில் இருந்த, 25 சவரன் நகை, இரண்டு மடிக்கணினி, இருசக்கர வாகனத்தை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.