தேடல்

பெண்கள் பாதுகாப்பு: மன்மோகன்சிங்உறுதி

புதுடில்லி: பெண்களின்பாதுகாப்பு தொடர்பாக, உரிய நடவடிக்கைஎடுக்கப்படும், என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவிக்கு நீதிகேட்டு , பல்வேறு தரப்பினரும்போராட் டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் கோபத்தில் உண்மையும், நியாயமும் உள்ளது.அதேநேரத்தில்,எல்லாரும் அமைதி காக்க வேண்டும். இப்பிரச்னையை முன்வைத்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டது வருத்தத்திற்கு உரியது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம்கிடைக்க, நாம் எல்லாரும் ஒன்றிணைந்துள்ளோம். அதேநேரத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவக்கல்லூரி மாணவியின் உடல்நிலை குறித்தும் கண்காணித்து வருகிறோம். அவர், விரைவில் குணமடைந்து வீடுதிரும்ப, நாம் எல்லாரும் பிரார்த்தனை செய்வோம்.பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, உரிய நடவடிக்கையை மத்தியஅரசு எடுக்கும். இவ்வாறு, பிரதமர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவியின் தந்தை வேண்டுகோள்: பொதுச்சொத்தை சேதப்படுத்தாமல் , அமைதி திரும்ப போலீசாருக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவ மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லி பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தை கூறுகையில், எனது மகள் தைரியமானவள்.அவர் நிச்சயம் உயிர்பழைப்பாள். தற்போது சுய நினைவுடன் உள்ளார். அவருக்காக வேண்டிக்கொள்ளவேண்டுகிறேன். அவர் மனஉறுதி மிக்கவர். டில்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்காமல், போலீசாருக்கு உதவ வேண்டும் என கேட்டு கொண்டார்.