தேடல்

புண்ணாக்கு ஏற்றுமதி40 சதவீதம் வளர்ச்சி

கோல்கட்டா:சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின், புண்ணாக்கு ஏற்றுமதி, 7.68 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப் பட்ட ஏற்றுமதியை (5.50 லட்சம் டன்) விட, 40 சதவீதம் அதிகமாகும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இதில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 28.07 சதவீதம் உயர்ந்து, 4.84 லட்சம் டன்னிலிருந்து, 6.20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.


நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, பத்து மாத காலத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 36.78 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 44.85 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.


இதில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 17.72 சதவீதம் சரிவடைந்து, 30.82 லட்சம் டன்னிலிருந்து, 25.36 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், தென் கொரியாவிற்கான சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 6.09 லட்சம் டன்னிலிருந்து, 7.65 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. வியட்நாமிற்கான ஏற்றுமதி, 7.86 லட்சம் டன்னிலிருந்து, 5.38 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. ஜப்பானிற்கான ஏற்றுமதி, 4.63 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.