தேடல்

பெண் மாயம்

திருநின்றவூர் :

குடும்ப பிரச்னைகாரணமாக, வீட்டைவிட்டு வெளியேறிய மனைவியை, கண்டுபிடித்து

தரக்கோரி, கணவர், போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆவடி அடுத்த

திருநின்றவூர் பெரியார் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் சண்முகம், 64;

இவரது மனைவி பானுமதி, 34. இவர்களுக்கு சிவராமன், 2, என்ற குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த, 15ம் தேதி, கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப

பிரச்னையால், கோபித்து கொண்ட பானுமதி, வீட்டை விட்டு வெளியில் சென்றார்.

அதன்பின் வீடு திரும்பவில்லை.இதையடுத்து, நேற்று காலை, திருநின்றவூர்

போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார்விசாரித்து வருகின்றனர்.