தேடல்

பெண் வீரர்கள் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா

வாஷிங்டன்: போர் பகுதிகளுக்கு பெண் வீரர்களைஅனுப்ப அமெரிக்க ராணுவம் தடைவிதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டுள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக போரிட அமெரிக்க தனது ராணுவத்தினை அனுப்பி வைத்துள்ளது. இதில் பெண் வீரர்களும் இடம் பெற்றனர். இந்நிலையில் போரின் போது இவர்கள் பலியாவதும் , பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக புகார் எழுந்தது. இதனால் பெண் வீரர்களை போருக்கு அனுப்புதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ராணுவ அமைச்சர் லியோன் பெனட்டா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பெண் வீரர்களை போர்பகுதிக்கு அனுப்புவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்என அறிவித்தார்.இதையடுத்து அமெரிக்கா தனது ராணுவ கொள்கையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக லியோன் பெனட்டா, ராணுவ தலைமை தளபதி மார்டின் திம்சே ஆகியோர் கூட்டமாக அறிவிக்கின்றனர். இந்த அறிக்கையில், போர் பகுதிகளில் ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகிய பிரிவுகளில் இனி பெண் வீரர்கள் இடம் பெறமாட்டார்கள் என்ற தடை விலக்கிக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட உள்ளது.