தேடல்

பாபநாசத்தில் நீர்மின் உற்பத்தி துவங்கியது

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையில் சேகரிக்கப்படும் நீரை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் நீர் மின் நிலையம், 1944 முதல் செயல்படுகிறது. 143 அடி உயரமுள்ள பாபநாசம் அணையில், தற்போது, 75 அடி தண்ணீர் உள்ளது.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான நெல் சாகுபடி, நாற்று நடுவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு தற்போது, 300 கன அடி வீதம், தண்ணீர் நா‌ளை திறக்கப்படுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி, நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்க உள்ளது.பாபநாசம் நீர் மின் நிலையத்தில், ஒவ்வொன்றும், 8 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட நான்கு யூனிட்டுகள் உள்ளன. தற்போது, முதல் யூனிட்டில் மட்டும் மின்சாரம் உற்பத்தி நடக்கிறது.